காதலித்து மணம் புரிவேன் லட்சுமி மேனன்

இன்றைய முன்னணி நடிகைகளில் குடும்பப் பாங்காகவும், நமது பக்கத்து வீட்டுப் பெண்ணாகவும் இருக்கும் ஒரே நடிகை லட்சுமி
மேனன் மட்டுமே. கடந்த ஆண்டிலும் சில வெற்றிப் படங்களில் நடித்தவர் இந்த ஆண்டில் கொஞ்சம் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதால் படங்களில் நடிப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொணடுள்ளார் என்கிறார்கள்.

அதனால்தான், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்தில் கூட அவரால் நாயகியாக நடிக்க முடியவில்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதுதான் லட்சுமி மேனனுக்கு பொதுத் தேர்வுகள் இருப்பதால் அவரே வேண்டாமென்று சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

லட்சுமி மேனனுக்கும், விஷாலுக்கும் இடையே காதல் என்று கடந்த காலங்களில் அதிகமாகவே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இன்றைய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தனக்கு வரப் போகும் மாப்பிள்ளை கண்டிப்பாக சினிமாவில் இருக்கக் கூடாதென்றும், தன்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்றும் லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.

லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள 'கொம்பன்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget