பிசாசு நாயகியின் பீலிங்ஸ்

ஆபரேஷன் சக்சஸ்..பேஷண்ட் அவுட் என்று சொல்வார்கள். பிரயாகா மார்ட்டினின் நிலைமை இப்படித்தான் ஆகிவிட்டது.


யார் இந்த பிரயாகா மார்ட்டின்? கடந்த வருடம் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிசில் கலக்கிய மிஷ்கினின் பிசாசு படத்தில் பிசாசாக நடித்தவர்தான் இந்த பிரயாகா மார்ட்டின். கேரளாவில் உள்ள கொச்சின்தான் இவரது சொந்த ஊர். மாடலிங் துறையில் சிலகாலம் குப்பைக் கொட்டிவிட்டு பிறகு சினிமாவுக்கு வந்தவர். தமிழில் பிசாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரயாகாவுக்கு தனது முதல் படமே வெற்றிப் படமாக அமைந்துள்ளதில் ஏக மகிழ்ச்சி.

என்ன பிரயோஜனம்? பிசாசு கெட்டப்புக்காக போட்ட மேக்கப்பில் இவரது ஒரிஜினல் தோற்றம் மறைந்துவிட்டது. எனவே பிசாசு படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான் என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அதனாலோ என்னவோ தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் தேடி வரவில்லை.

அதே நேரம், பிரயாகாவுக்கு மலையாள முன்னணி நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து கார்ட்டூன் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஆக்ஷனும், காதலும் கலந்த திரில்லர் மூவி! ஃபஹத் இப்படத்தில் அனிமேஷன் வல்லுனராக நடிக்கிறாராம். பிரயாகா கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம். தனது முதல் தாய் மொழிப்படமே முன்னணி ஹீரோவான பஹத் ஃபாசிலுடன் அமைந்துள்ளதால பெரும் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார் பிசாசு பிரயாகா!.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget