பிரிட்டன் தேவதைக்கு அடித்த லக்

'மதராச பட்டணம்' படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டன் தேவதை எமி, அதன் பின், 'தாண்டவம்' படத்திலும், ஓரிரு இந்தி, தெலுங்கு படங்களிலும்
தலை காட்டினார். ஆனாலும், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், மூட்டை முடிச்சுடன் பிரிட்டனுக்கு திரும்ப எண்ணிருந்த எமிக்கு, 'ஐ' படம் மூலம் அதிர்ஷ்டம் அடித்தது. முழு மூச்சாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், அந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு பின், அவருக்கு, தமிழில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிகின்றன. இதனால், சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் எமி, 'இந்திய திரையுலகை ஒரு கை பார்க்காமல் போவது இல்லை' என, இங்கேயே டேரா போட்டு விட்டார். இனி, எமியின் எதிர்காலம் வசந்த காலம் தான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget