பவர்ஸ்டாரின் கலாய்க்கலாம் வாங்க

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலேயே பவர்ஸ்டார் சீனிவாசனை கலாய்த்தபடிதான் நடித்திருந்தார் சந்தானம். ஆனால் அதை அப்போது
காமெடி என்று நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு, இப்போது ஐ படத்திற்கு பிறகுதான் தன்னை இதுவரை எல்லாருமே கலாய்த்துதான் நடித்திருக்கிறார்கள். நாம்தான் அதை காமெடி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்திருக்கிறார்.

ஆனால், ஐ படத்தில் அவரை சந்தானம் கலாய்க்கும் காட்சிகளுக்கு தியேட்டர்களில் விசில் பறக்கிறதாம். கைதட்டி ஆரவாரத்துடன் ரசிக்கிறார்களாம். இதை பவர்ஸ்டாரே தியேட்டர்களுக்கு சென்று பார்த்திருக்கிறார். குறிப்பாக, நீங்க என்னை கலாய்க்க கலாய்க்க நான் வளர்ந்துகிட்டேதான் இருப்பேன் என்று அவர் பேசி நடித்த காட்சிகளுக்கு பெருத்த வரவேற்பாம். அதோடு, சில காமெடி நடிகர்களே அவருக்கு போன் செய்து அவரது காட்சிகளை அதிகமாக ரசித்ததாக கூறினார்களாம்.

அதனால்,. இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் பவர்ஸ்டார். அதாவது, இனிமேல் காமெடி என்ற பெயரில் என்னை எல்லாமே கலாய்க்கலாம் என்று சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனால், தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் சில காமெடியன்களும் பவர்ஸ்டாரை கலாய்த்தாவது ரசிகர்களை சிரிக்க வைப்போம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். ஆக, பவர்ஸ்டாரின் கலாய்ககலாம் வாங்க என்கிற இந்த திட்டம் அவருக்கு பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகும் என்று தெரிகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget