பொங்கல் ரிலிஸ் படங்களின் நிலவரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, “ஐ, ஆய்வுக் கூடம், ஆம்பள, டார்லிங்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ஆய்வுக் கூடம்' படத்தை
மற்ற படங்களுடன் சேர்த்துப் பேச முடியாது. ஆக, மற்ற மூன்று படங்கள் மீதுதான் எதிர்பார்ப்பும், அந்தப் படங்கள் எப்படியிருக்கும் என்ற கணிப்பும் ஏற்பட்டது.
விளம்பர ரீதியில் 'ஐ, ஆம்பள' படங்கள் கொஞ்சம் அதிகமாக பப்ளிசிட்டியைத் தேடிக் கொண்டாலும், 'டார்லிங்' படமும் கடைசி நேரத்தில் அந்தப் போட்டியில் குதித்தது. விக்ரம், விஷாலைப் போன்று முன்னணி நடிகரோ, அல்லது, ஷங்கர், சுந்தர் .சி போன்ற அனுபவசாலி இயக்காத படமாகவே 'டார்லிங்' படம் வெளிவந்தது.

இந்த மூன்று படங்களில் 'ஐ' திரைப்படம் வசூலை வாரிக் குவித்தாலும், படத்தின் ரிசல்ட்டைக் கணிக்கும் 'ரிப்போர்ட்' என்பது படத்திற்கு பாதகமாகவே அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல படத்தைக் கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால், 'ஐ' படம் வழக்கமான ஷங்கர் படம் போல இல்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

'மத கஜ ராஜா' படத்தில் இணைந்த சுந்தர்.சி, விஷால் கூட்டணி, அந்தப் படம் இதுவரை வெளிவராத சூழ்நிலையிலும், தமிழ் சினிமாவின் சென்டிமென்ட்டுகளைத் தகர்த்து மீண்டும் 'ஆம்பள' படத்தின் மூலம் இணைந்து அவர்கள் படத்தைப் பற்றிப் பேசவும் வைத்து வெற்றியும் பெற்று விட்டார்கள். அதிக பட்ஜெட் ஏற்றாமல் குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட்ட இந்தப் படம் நேற்று வெளியாக தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக, மேலே சொன்ன மூன்று படங்களில் 'ஆம்பள, டார்லிங்' ஆகிய படங்களில் நகைச்சுவைதான் பிரதானமாக இருப்பதால் அந்தப் படங்களின் 'ரிப்போர்ட்'டும் நல்லபடியாக வெளியே வந்துள்ளது. 'ஐ' படம் ஆரம்பத்தில் நகைச்சுவையாக ரசிக்க வைத்தாலும், அதன் பின் கனமான திரைக்கதை இல்லாததால் கொஞ்சம் தடுமாறுகிறது.

இதிலிருந்து புரிவது என்னவென்றால், தற்போதைய சூழலில் ரசிகர்கள் நகைச்சுவைப் படங்களைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்று புரிகிறது. வழக்கமான ஆக்ஷன், சென்டிமென்ட் இருந்தாலும் அவற்றில் நகைச்சுவை அதிகம் இருந்தால்தான், 'அதுக்கும் மேல' பேசப்படும் படமாக அமையும் என்பது மட்டும் உண்மை.

அதே போல படத்தில் இருக்கும் பிரம்மாண்டமோ, பாடல் காட்சிகளே அவர்களை ஈர்ப்பதில்லை, கதையும், வித்தியாசமான கதைக்களமும், சொல்ல வந்த விஷயத்தை நீட்டி முழக்காமல் 'சுருக்'கென்று சொல்வதைத்தான் அவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பிய, 90களில் அறிமுகமான சில இயக்குனர்களுக்கு தற்போதை தலைமுறை இடைவெளி அவர்களின் வெற்றியைத் தடுக்கிறது. எத்தனை படத்தில்தான் பார்த்ததையே பார்த்துக் கொண்டிருப்பது, வேற வேற மாதிரி... யோசிங்க என்று ரசிகர்கள் சொல்வது அவர்கள் காதில் இந்நேரம் விழுந்திருக்கும். அப்படி அது இன்னும் விழவில்லை என்றால் கொஞ்சம் கீழே விழுந்த அவர்கள் மீண்டும் எழுந்திருக்க நேரமாகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget