மலையாள்த்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து விட்டு இப்போது கதாநாயகியாக உருவெடுத்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில்
சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடிப்பவர், அதையடுத்து, பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சடடை, விக்ரம் பிரபு நடிக்கும் இது என்ன மாயம் என ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் மற்ற மலையாள நடிகைகளைப்போன்று கணுக்கால் கவர்ச்சியை கூட காண்பித்து நடிக்க மாட்டேன் என்று எந்த கண்டிசன்களும் போடவில்லையாம் கீர்த்தி சுரேஷ். கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கதையை கேட்கும்போதே தனது மனநிலையை ஓப்பன் பணணிவிட்டாராம்.
அதனால்தான், ஒரே நேரத்தில் மூன்று படங்கள் புக்காகி விட்டதாம். மேலும், இந்த படங்கள் திரைக்கு வரும்போது முன்னணி நாயகியாகி விடுவார் என்று நினைக்கும் சில படாதிபதிகளும் அவரை முற்றுகையிட்டுள்ளனர். அதனால் தீவிரமாக கதை கேட்கவும் தொடங்கியிருக்கும் அவர், தனது தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். காரணம், மலையாளத்தில் இருநது தமிழுக்கு வந்து புகழ் கொடி நாட்டிய அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின் போன்று தானும் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு நடிகை என்கிற அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதற்காக, தெலுங்கு படங்களுக்கும் கால்சீட் கொடுத்து வருகிறார்.

கருத்துரையிடுக