சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்த படம் இளைஞன். இந்த படத்தில் வில்லியாக நடித்திருந்தார் நமீதா.
ஆனால் அதையடுத்து அவருக்கு கிடைத்த ஒரே படம் இளமை ஊஞ்சல். இநத படத்தில் நமீதா, கிரண், மேக்னாநாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி சிங் என பல கவர்ச்சி நடிகைகள் நடித்துள்ளனர்.
படத்திலும் நடிகைகளாகவே இவர்கள் நடிக்கிறார்கள். அதனால் கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் இல்லை என்று கூறப்படும் இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவராமல் இழுத்தடித்து வந்ததால், இளமை ஊஞ்சலை ரொம்பவே எதிர்பார்த்திருந்த நமீதா நொந்து போய் விட்டார். மற்ற நடிகைகளெல்லாம் இப்படியொரு படத்தில் நடித்ததையே மறந்து போய் விட்டனர். இதில் கீர்த்தி சாவ்லா மும்பைக்கு போய்விட்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட இளமை ஊஞ்சலுக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும தயாராகியிருக்கும் இப்படத்தை இம்மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கிறது. மேலும், கர்நாடகாவில் மட்டும் 100 தியேட்டர்களில் படத்தை வெளியிடுபவர்கள், தமிழ்நாடு, ஆந்திராவில் இன்னும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக