ஸ்ரீ தேவியின் மகளான அக்சரா

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசு அக்ஷ்ராஹாசன். தனது அக்கா ஸ்ருதியை போலவே பாலிவுட் சினிமாவின் மூலம் தனது
நடிப்பை பயணத்தை தொடங்கியுள்ளார். பால்கி இயக்கியுள்ள, 'ஷமிதாப்' படத்தில் அமிதாப், தனுஷ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் முதல்படம் வெளியாகும் முன்பே அடுத்தபடத்தில் கமிட்டாகிவிட்டார் அக்ஷ்ரா.

தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்தபடியாக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். ரவி உதயக்குமார் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீதேவியுடன் அக்ஷ்ராவும் இணைந்து நடிக்கவுள்ளார்.

வளர்ப்பு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பாச போராட்டம் தான் இப்படத்தின் கதை. இதில் ஸ்ரீதேவி அம்மாவாகவும், அவரது வளர்ப்பு மகளாக அக்ஷ்ராவும் நடிக்கவுள்ளனர். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget