வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

என்னடா இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா...? ஆமாம் ஒரு படத்தில் வடிவேலுவை பார்த்து ஒருவர் வெள்ளையா
இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று கூறுவார். இப்போது இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். சமீபகாலமாக நகைச்சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது இந்த வசனமும் தலைப்பாகியுள்ளது.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை இக்நைட் மற்றும் இனோஸ்டார்ம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். விளம்பரம் மற்றும் வர்த்தக துறையில் இருந்த அபி என்ற ஏ.எல்.அபநிந்திரன் இயக்குகிறார்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற இந்த தலைப்பு பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல, கதைக்கும் மிக பொருத்தமானது என்பதால் தான் இதை தலைப்பாக வைத்துள்ளோம். நமது சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன், சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம் தான் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல கதை அமைப்பும், நேர்த்தியான படபதிவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். இந்த படம் எல்லா தரப்பினரையும், வயதினரையும் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் இயக்குனர் அபநிந்திரன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget