பட்லாபூர் சினிமா விமர்சனம்

நடிகர் : வருண் தவான், நவாஜூதீன் சித்திக்,  வினய் பதக், 
நடிகை : ஹியூமா குரேஷி, யாமி கவுதம், திவ்யா தத்தா, ராதிகா ஆப்தே
டைரக்டர் : ஸ்ரீராம் ராகவன்
தயாரிப்பாளர் : தினேஷ் விஜன், சுனில் லுல்லா


ஏக் ஹசீனா தீ, ஜானி காடர், ஏஜென்ட் வினோத் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பட்லாபூர். வருண் தவான் படத்தில் புதுவித தோற்றத்தில் காட்சியளிக்கிறார்

மனைவி மிஷா (யாமி கவுதம்), மகன் ராபின் உடன் சந்தோஷமாக, இல்லற வாழ்க்கை நடத்தி வருகிறார் ரகு (வருண் தவான்). வங்கி கொள்ளையனான லாயக் (நவாஜூதீன் சித்திக்)கால், மிஷாவும், ராபினும் கொல்லப்படுகின்றனர். இதற்காக, லாயக்கிற்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இதனால் கடும் கோபமுறும் லாயக், ரகுவை பழிவாங்க திட்டமிடுகிறான். லாயக்கின் பழிவாங்கும் செயலை, ரகு எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் மீதிக்கதை...

தன் படத்தில் நடிகர், நடிகைகளிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கற்றுக்கொண்டுள்ள இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், இந்த படத்தில் தோற்றுவிட்டார் என்றே கூற வேண்டும். படத்தின் முதல் 30 நிமிடங்கள், படத்தை வேறு யாரே இயக்கியது போல உள்ளது. பின்பாதி, பெரும் இழுவையாகவே உள்ளது. படத்தின் கதை சிறந்ததாக இருக்கும்போதிலும், அதை சொல்ல அதிக காலம் எடுத்துக்கொண்டதால், ரசிகர்கள் அயர்ந்துவிடுவதால், பரபரப்பு என்ற பேச்சுக்கே, படத்தில் இடமில்லாமல் போய்விடுகிறது. படத்தில் முதல்பாதியில், எடிட்டிங் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. பின்பாதியில், நடிகர்களின் உணர்ச்சிகளை புதுவிதமாக காட்டுகிறேன் என்று எடிட்டர் அதிக இடத்தில் கத்தரித்துவிட்டதால், படத்தில் என்ன நடக்கிறது என்று படம் பார்ப்பவன் குழம்பி விடுகிறான். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒளிப்பதிவாளரின் தனித்திறமை அங்கும் பளிச்சிடுகிறது. நவாஜூதீன் சித்திக் வரும் காட்சிகளில், வசனம் சிறப்பாக உள்ளது. சச்சின்-ஜிகாரின் இசை, படத்திற்கு பெரும்பலம்.

படத்தில் சிறந்த நடிப்பை, வருண் தவான் வெளிப்படுத்தியுள்ளார். இளைஞர் தோற்றத்திலிருந்தாலும், அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் உதடுகள் அசைவதைவிட, அவரது கண்ணே, படத்தில் அதிகளவு பேசியிருக்கின்றன. கண்களாலேயே, வருண் நடித்துள்ளார் என்றே சொல்லலாம். வசனங்கள் குறிப்பிடத்தக்கவகையில் இருப்பதால், வருணின் வசன உச்சரிப்பும், காட்சிக்கு காட்சி மெருகூட்டுகிறது. பாடி லாங்குவேஜ், மற்றும் வசன உச்சரிப்புகளில், வருணிற்கும், நவாஜூதீன் சித்திக்கிற்கும் இடையே படத்தில் ஒரு பெரும்போட்டியே நடக்கிறது. நவாஜூதீன் வரும் காட்சிகளை, நாம் ஒரு விநாடி தவறவிட்டாலும், கதையின் போக்கு நமக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. பட்லாபூர், நவாஜூதீனின் கேரியரில் சிறந்த படமாக அமையும். யாமி கவுதம், சிறிதுநேரமே, படத்தில் வந்தாலும், அவரது பகுதி சிறப்பாக உள்ளது. பாலியல் தொழிலாளி வேடத்தில், ஹியூமா குரேஷி நடித்துள்ளார். அவரது பகுதியும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ராதிகா ஆப்தே மற்றும் வினய் பதக்கின் கேரக்டரைசேசனும் சிறப்பாக உள்ளது.

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்....
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget