என்னை அறிந்தால் வசூல் நிலவரம்

'என்னை அறிந்தால்' படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்து விட்டது. படத்தைப் பற்றிக் கொஞ்சம் நெகட்டிவ்வான விமர்சனங்கள் வெளிவந்தாலும்
அது படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் படத்திற்கான வசூல் நன்றாகவே இருந்து வருகிறதாம். அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் உள்ள தியேட்டர்களில் நேற்று மதியக் காட்சிகள் கூட ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்ததாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும் போது அந்தப் படங்களைப் பற்றிய வசூலை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதி வருகிறார்கள். எதுவுமே அதிகாரப்பூர்வமாக இல்லாத ஒன்றாக இருந்தாலும் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் லாபம் வருவதற்கான வாய்ப்புதான் அதிகம் இருக்கும் என்றும் நஷ்டம் வர வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், அடுத்தடுத்து 'அனேகன், காக்கி சட்டை' படங்கள் வெளிவருவதால் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் 'என்னை அறிந்தால்' படத்திற்கான வசூல் குறையலாம் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும், அந்தப் படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்துத்தான் இந்தப் படத்தின் வசூல் ஏறுவும், இறங்கவும் வாய்ப்புள்ளதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget