அனேகன் சினிமா துளிகள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அனேகன். தனுஷ் ஜோடியாக அமைரா நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியதில்
இருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆமாம்.இன்று இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இப்போது இப்படம் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்...

* முதன்முறையாக தனுஷ் - கே.வி.ஆனந்த் இணைந்துள்ள படம் அனேகன்.

* அனேகன் படத்தில் தனுஷ் நான்கு விதமாக கெட்டப்புகளில் நடித்துள்ளார். பல்வேறு காலகட்டங்களில் கதை நகருவது போன்று படம் உருவாகியுள்ளது.

* அனேகன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் ஹீரோயின் அமைரா தஸ்தர். இந்தி படங்களில் இவரது நடிப்பை பார்த்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் கே.வி.ஆனந்த்.

* அமைரா, 14 வயது பள்ளி மாணவி மற்றும் 25 வயது ஐடி மாடர்ன் பெண்... என இரண்டு ரோல்களில் நடித்துள்ளார்.

* அனேகன் படத்தின் கதை முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

* கார்த்தி இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார். 55வயது வில்லத்தன ரோலில் நடித்து இருக்கிறார்.

* அனேகன் படத்தின் ஷூட்டிங், இந்தியாவில் பெங்களூரூ, சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி போன்ற ஊர்களிலும், பர்மா, மலேசியா, வட அமெரிக்கா போன்ற வௌிநாடுகளிலும் நடந்துள்ளது.

* ஔிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் அனேகன் படத்தின் காட்சிகளை அவ்வளவு அழகாக படம்பிடித்து இருக்கிறாராம். படத்தில் இது பெரிதும் பேசப்படும் என்கிறார்கள்.

* தொடர்ந்து நான்காவது முறையாக எழுத்தாளர்கள் சுபா உடன் இணைந்து பணியாற்றியுள்ளார் கே.வி.ஆனந்த்.

* வைரமுத்து, சி.எஸ்.அமுதன், லோகேஷ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர், ஹாரீஸ் ஜெயராஜ் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்.

* அனேகன் படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. அதிலும், ''டங்கா மாரி.... ஊதாரி.... என்ற பாடல் தான் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாரணம் ஆயிரம் (அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...), என்னை அறிந்தால் (அதாரு... உதாரு...) படங்களின் பாடல்களை காட்டிலும் செம குத்து பாடலாக டங்கமாரி பாடலை கொடுத்துள்ளார் ஹாரீஸ்.

* அனேகன் படத்தின் சவுண்ட் டிசைனிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் வௌிநாடுகளில் நடந்துள்ளது.

* அனேகன் படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளும் அதிகம் இடம்பெற்றுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget