நடிகையை கலங்க வைத்த காக்கா முட்டை

அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள் மூலம்
பிரபலமானார். தற்போது இடம்பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தனுசும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை என்ற படத்தில் நடித்தார் அவர். அந்த சமயத்தில் சரியான படங்கள் கைவசம் இல்லாததால் தேடிவந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று அந்த படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

காரணம், அந்த படத்தில் அவருக்கு 30 வயது மதிக்கத்தக்க சேரி பெண் வேடமாம். அதனால் தனது உடல் எடையை பெருக்க வைத்ததோடு, முக அழகையும் அழுக்குப்படுத்திதான் நடித்தாராம். ஆனால், அதன்பிறகு அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் வெளிவந்து அவருக்கென ஒரு இமேஜை உருவாக்கி விட்டன.

அதனால், தான் 30 வயது பெண்ணாக கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் காக்கா முட்டை படம் வெளிவந்தால் தனது ஹீரோயின் இமேஜ்க்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று மனதளவில குழம்பி புலம்பிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget