புதுமுகங்கள் மிதுன், வைதேகி நடிக்கும் படம் ''பட்ற''. ஜி.கே.சினிமா தயாரிக்க, ஜெயந்தன் இயக்குகிறார். ஹீரோயின் வைதேகி. தற்போது
கேரளாவில் பிளஸ் 2 படித்து வருகிறார். பட்ற படத்தின் படப்பிடிப்பின் போது வைதேகி கடலை பார்த்து மயங்கி, மிரண்டு போயிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:
நான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். ஆனால் பட்ற படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். முறைப்படி நடனம் கற்றிருக்கிறேன். பல நடன போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன். நான் பரீட்சைக்கு தீவிரமாக படித்துக் கொண்டிருந்தபோதுதான் பட்ற படத்தின் பாடல்களை படமாக்கினார்கள். பரீட்சையும் பாதிக்காமல் படப்பிடிப்பும் பாதிக்காமல் நடித்து முடித்தேன்.
நான் கேரளாவில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் கடலை பார்த்தது இல்லை. எங்கள் ஊரைச் சுற்றி மலைகள்தான் இருக்கும், எங்கள் ஊரிலிருந்து 50 கிலோ மீட்டரில் கடல் இருக்கிறது. என் தந்தைகக்கு சீமேனியா, அதவாது கடலைக் கண்டால் பயம். அதனால் என்னை கடல் பார்க்க அழைத்துச் சென்றதே இல்லை.
பட்ற படத்திற்காக பாண்டிச்சேரி படப்பிடிப்புக்கு வந்தபோதுதான் கடலை பார்த்தேன். அப்போதுதான் எங்கப்பாவுக்கு இருந்த சீமேனியா எனக்கும் இருப்பதை உணர்ந்தேன். அவ்வளவு பெரிய கடலை பார்த்தும் முதலில் வாந்தி வந்தது. அப்புறம் பயம் வந்தது. எனது பயத்தை போக்க போட்டில் நீண்ட தூரம் கடலுக்குள் அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு பயம் போய்விட்டது. ரிலாக்சாக நடித்தேன். இப்போது கடலில் நீச்சல் அடிக்க சொன்னாலும் அடிப்பேன்" என்கிறார் வைதேகி.

கருத்துரையிடுக