தல நடிப்பில் அச்சமில்லை

தெலுங்கில் செளர்யம், சங்கம், தருவு ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் பின்னர் அஜீத்தை
வைத்து வீரம் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் என்னை அறிந்தால் படத்தை அடுத்து மீண்டும் அஜீத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் சிவா. வீரம் படத்தை விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்த நிலையில், இந்த புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் டைட்டீலை படம் திரைக்கு வரும் நேரத்தில் வெளியிட்ட நிலையில், சிவாவோ, வீரம் டைட்டீலை முன்னரே அறிவித்து விட்டார். அதேபோல் இந்த முறையும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே டைட்டீலை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

அதனால், நூற்றுக்கணக்கான டைட்டீல்களை யோசித்து இப்போது ''அச்சமில்லை'' என்ற தலைப்பினை முடிவு செய்து வைத்திருக்கிறாராம் சிவா. அஜீத்துக்கும் இந்த டைட்டீல் ஓகேதானாம். அதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த டைட்டீலை உறுதிப்படுத்த உள்ளாராம் டைரக்டர் சிவா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget