தென்னிந்திய நடிகைகளில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே. த்ரிஷா, சமந்தா,
ஸ்ருதிஹாசன் போன்றோர் டிவிட்டரில் அடிக்கடி எதையாவது ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையுமே 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். ஆனால், இதுவரை சமந்தாவின் டிவிட்டர் கணக்கு இன்னும் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறது.
இதனிடையே, சமந்தா திடீரென டிவிட்டரை விட்டு தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்தது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா, அப்படி விலகக் காரணம் என்ன என்று தெரியாமல் அவருடைய ரசிகர்களும் குழப்பமடைந்துள்ளார்கள். சித்தார்த்துடனான காதல் முறிவுக்குப் பிறகு சமந்தா நிறையவே மன வருத்தத்தில் இருந்தாராம். அதைப் பற்றி மறைமுகமாகக் கூட அவர் டிவிட்டரில் சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அடுத்து தெலுங்கின் முன்னணி ஹீரோவான ராம்சரண் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் சமந்தா சம்பளப் பிரச்சனையால் தவிர்த்து விட்டார் என்று சொல்கிறார்கள். இதனால், தொடர்ந்து சித்தார்த், ராம் சரண் ஆகியோரின் ரசிகர்கள் சமந்தாவிற்கு டிவிட்டரில் நிறையவே கருத்துக்களைத் தெரிவித்தார்களாம். அதனால் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டாமென்றுதான் சமந்தா டிவிட்டரை விட்டு விலகியுள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக