சல்லடை போட்டு சில்லறை பார்த்த புலி

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, 'நான் ஈ' புகழ் சுதீப், ஸ்ரீதேவி என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருப்பதால் புலி படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே புலி படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே இப்படத்தின் வியாபாரம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல, சத்தமில்லாமல் பல ஏரியாக்கள் கைமாறியும் விட்டன.

புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் படங்களை விற்றுக் கொடுக்கும் மீடியேட்டராக இருப்பவர். இந்தத்தொழிலில் அவருக்கு பல வருட அனுபவம் உண்டு. அதை வைத்து விநியோகஸ்தர்களில் யாரெல்லாம் சவுண்ட் பார்ட்டிகள் என்று சல்லடைபோட்டு சிலரை தேர்வு செய்து அப்படிப்பட்ட விநியோகஸ்தர்களிடம் புலி படத்தின் ஏரியாவை விற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் வாங்கி உள்ளது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget