கால்கேர்ளாக மிரட்டும் அனுமோல்

கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படம் 'ஷட்டர்'. தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக
மாறிவிட்ட ஜாய் மேத்யூ இயக்கிய, இந்தப்படத்தில் லால், சீனிவாசன், வினய் போர்ட் மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். துபாய் ரிட்டர்னான லால், தான் சொந்த ஊருக்கு வந்திருக்கும் சமயம் திடீரென சபலப்பட்டு விலைமாது ஒருவரை, தனது ஆட்டோ ட்ரைவர் வினய் போர்ட் உதவியுடன் காலியாக உள்ள தனது கடைக்கு அழைத்து செல்வார்.

அவர்கள் இருவரையும் உள்ளே வைத்து வெளியே பூட்டிவிட்டு அவர்களுக்கு இரவு டிபன் வாங்கிவருவதாக செல்லும் வினய் போர்ட் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார். நேரம் ஆக ஆக பசியால் விலைமாது கத்த ஆரம்பிக்கிறாள். அவளுக்கு வேண்டிய பணம் தருவதாக சொல்லி அவள் வாயை அடைத்தாலும், தனது மனைவி குழந்தைகளுக்கு தெரிந்தால் மானம் போய்விடுமே என ஒருநாள் முழுவதும் பூட்டிய அறைக்குள் லால் அனுபவிக்கும் பதற்றம் தான் படத்தின் மொத்தக்கதையும்.. மலையாளத்தில் சஜிதா என்கிற துணை நடிகை விலைமாதுவாக சிறப்பாக நடித்திருந்தார்.

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து ஜேசுதாஸ் தெரிவித்த கருத்திற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக எதிர்கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினாரே ஒரு நடிகை. அவரே தான் இவர். தற்போது 'ஷட்டர்' படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. எடிட்டர் ஆண்டனி இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். இந்த விலைமாது கேரக்டரில் தமிழில் நடிக்க இருப்பவர் மலையாள நடிகை அனுமோல் தான். இவர் ஏற்கனவே 'வெடிவழிபாடு' என்கிற படத்திலும் விலைமாதுவாக நடித்துள்ளார். தவிர தமிழில் 'திலகர்' என்கிற படத்தில் கிஷோர் ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget