பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கங்கனா ரணாவத்தும் ஒருவர். கடந்தாண்டு வௌியான குயின் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த
கங்கனா, அடுத்தப்படியாக ரீமா காக்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ஆனால் அவருடன் ஜோடி போட ஹீரோக்கள் தான் யாரும் தயாராக இல்லை. இதற்கு காரணம் இயக்குநர் தேர்ந்தெடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் பிறபடங்களில் பிஸியாக இருப்பதால் தான் இந்த நிலை.
ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க சைப் அலிகானைத்தான் தேர்வு செய்தார் இயக்குநர். ஆனால் சம்பளம் உள்ளிட்ட சில பிரச்னைகளால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. மேலும் அவர் தற்போது ஷாந்தார், பர்சி, உத்தா பஞ்சாப் என அடுத்தடுத்து கைநிறைய படங்கள் வைத்திருப்பதால் அவரால் நடிக்க முடியாமல் போனது. சரி சைப் ஒத்துவரவில்லை என்று அர்ஜூன் கபூரிடம் கேட்டுள்ளார் இயக்குநர். அவருக்கும் கதை எல்லாம் பிடித்து போய்விட்டது. ஆனால் தற்போது அவர், ஆதித்யா சோப்ராவின் படத்தில் நடித்து வருவதால் கங்கனாவின் படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் கங்கனாவிற்கு ஏற்ற ஹீரோவை தேடி வருகிறார் இயக்குநர்.

கருத்துரையிடுக