என்னை அறிந்தால் பார்ட் 2 எப்போது?

அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகி
உள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார் என்று தகவல் அடிபட ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் கௌதம் மேனன் பிசியாக இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது குறித்து கௌதம் மேனன் தரப்பில் கேட்டபோது, அப்படி ஒரு திட்டம் கௌதம் மேனனுக்கும் இல்லையாம், அஜித்துக்கும் இல்லையாம்! அந்த செய்திகள் வெறும் வதந்தி என்று சொல்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி என்னை அறிந்தால் படம் வெளியானதும் சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் பிசியாகியுள்ளார் கௌதம் மேனன்.

இந்தப் படத்தை முடித்த பிறகுதான் தனது அடுத்த படத்தின் கதை பற்றியும் யார் ஹீரோ என்ற விஷயத்தையும் முடிவு செய்ய உள்ளாராம்! கௌதம் மேனன் கதை இப்படி என்றால்... என்னை அறிந்தால் படம் வெளியான நிலையில் ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜித்.

அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget