கைத்தறி சேலையில் குடும்ப குத்துவிளக்கான வித்யாபாலன்

பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கும் படங்களும், அந்தப்படங்களில் அவரது கேரக்டர்களும், அதில் அவர் அணியும் உடைகளும் வேண்டுமானால்
கவர்ச்சியாகவோ, அல்லது சர்ச்சையை ஏற்படுத்துவதாகவோ இருக்கலாம். ஆனால் போது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பாந்தமாக புடவை உடுத்திக்கொண்டு குடும்ப குத்துவிளக்காகவே வலம் வருவதுதான் அவரது வழக்கம். அதிலும் தற்போது கைத்தறி சேலைகளைத்தான் விரும்பி அணிகிறார் வித்யாபாலன்.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. வித்யாபாலனுக்கு அவரது ரசிகர்கள் அன்பு மிகுதியால் பரிசுப்பொருட்கள் என ஏதாவது அனுப்பிக்கொண்டு இருப்பார்களாம். அப்படி வந்ததில் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர், அழகான 21 கைத்தறி நெசவு சேலைகளை அனுப்பியிருக்கிறார். அதன் வடிவமைப்பில் வியந்துபோன வித்யாபாலன் அதுமுதல் கைத்தறி சேலைக்கு தாவிவிட்டாராம். அதுமட்டுமல்ல, கைத்தறி சேலைகள் தயாரிக்கும் நெசவாளர்களை சந்திக்கவும் ஆர்வம் காட்டுகிறாராம்.

அவர்களை சந்தித்து அவர்களுடனே ஒரு நாள் செலவிட்டு அவர்கள் கைத்தறி சேலைகளை உருவாக்கும் அழகை நேரில் பார்க்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். “கைகளினால் நெய்யப்பட்ட, நமது நாட்டில் தயாராகும் புடவைகளை அணிவதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அப்படி இந்தியா முழுவதிலும் பல இடங்களில் இருந்து நான் நிறைய புடவைகளை சேகரித்து வைத்திருக்கிறேன்.. மேலும் பேப்பரில் இருக்கும் ஒரு டிசைன், எப்படி புடவையில் அச்சாக மாறுகிறது என்கிற மாயாஜாலத்தை நேரில் பார்க்கவும் விரும்புகிறேன்” என ஆர்வம் பொங்க கூறியுள்ளார் வித்யாபாலன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget