இரட்டை வேடத்தில் காமசூத்ரா நாயகி

பாலிவுட்டின் செக்ஸி நடிகை ஷெர்லின் சோப்ரா இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இவர் நடித்துள்ள காமசூத்ரா படம் விரைவில் வௌியாக
இருக்கிறது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற ''பிலிமிஸ்தான்'' படத்தை தயாரித்த சாட்டிலைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து சாட்டிலைட் பிக்சர்ஸின் சுபாஷ் சௌத்ரி கூறுகையில், இப்போது நாங்கள் தயாரிக்க இருக்கும் படம் பிலிமிஸ்தான் படத்தை விட மிகவும் சவாலானது. அதனால் இப்படிப்பட்ட படத்திற்கு ஒரு வலுவான ஆர்ட்டிஸ்ட் தான் வேண்டும் என்று நினைத்தோம். இந்தபடத்திற்காக நாங்கள் சில நடிகைகளை தேர்வு செய்தோம், ஆனால் இயக்குநர் டிகே ஷெரப் தான், ஷெர்லின் சோப்ரா தான் சரியாக இருப்பார் என்று கூறினார். அதன்படி அவரை தேர்வு செய்தோம். ஷெர்லினுக்கு இரண்டு வேடம், நிச்சயம் இந்தப்படம் ஷெர்லினை ஒரு வித்தியாசமான ரோலி்ல காட்டும், இந்தியா முழுக்க இப்படத்தை படமாக்க உள்ளோம், 2016ல் படம் ரிலீஸாகும் என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget