மறுபிரவேசம் செய்த அபிராமி

தமிழில், வானவில், மிடில்கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி உள்பட பல படங்களில் நடித்தவர் அபிராமி. கேரளத்து நடிகையான இவரும்
ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை போட்டபோதும் கமலுடன் நடித்த விருமாண்டியில் குளியல் காட்சிகளில் எல்லாம் நடித்து பேசப்பட்டார். அதையடுத்து, பல படங்களுக்கு அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் படையெடுத்தபோது, இத்தோடு நடிப்பதை நிறுத்திக்கொள்ளப்போகிறேன் என்று நோ என்ட்ரி போர்டு வைத்த அபிராமி, திருமணம் செய்து கொண்டு சினிமா உலகத்துக்கே டாட்டா காட்டினார்.ஆனால், 2004ல் திருமணம் செய்து கொண்டு வெளியேறிய அபிராமி, 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர், தமிழில் ஜோதிகா நடித்துள்ள ஹவ் ஓல்டு ஆர் யு படத்திலும், மலையாளத்தில் டிரைவர் ஆன் டியூட்டி படத்திலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மறுபிரவேசம் செய்திருக்கிறார்.
அந்த இரண்டு படங்களுமே திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் மீண்டும் குடியேறியிருக்கும் அபிராமி, 10 வருடத்துக்கு முன்பு தனக்கு சினிமா வாய்ப்புகளை வாங்கித்தந்த சில சினிமா மானேஜர்களை அழைத்து மீண்டும் தனக்கு சான்ஸ் வாங்கித்தருமாறு கூறி வருகிறார். அதோடு, படம் முழுக்க வரவேண்டும் என்பதில்லை. சிறிது நேரமே வந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக இருந்தால் போதும் என்றும் கூறியிருக்கிறார். அதனால் அபிராமியின் புதிய ஆல்பம் சில மெகா படநிறுவனங்களுக்கு சுற்றலில் விடப்பட்டிருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget