லெனோவா P70 ஸ்மார்ட்போன்

லெனோவா நிறுவனம் லெனோவா P70 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும், கைப்பேசியை பற்றி UAE மற்றும் ரஷ்யா
நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. லெனோவா P70 ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 1,399 (சுமார் ரூ. 14,000) விலையில் கிடைக்கிறது, மேலும் மற்ற சந்தைகளில் வெளியிடுவதை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

லெனோவா P70 ஸ்மார்ட்போனின் முக்கிய குறிப்பாக, இதில் 4G LTE இணைப்பு ஆதரவை கொண்டுள்ளது. இதில் பெரிய 4000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. டூயல் சிம் (மைக்ரோ சிம்) கொண்ட லெனோவா P70 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்பளே இடம்பெறுகிறது. 

இதில் 2ஜிபி ரேம் மற்றும் மாலி T760-MP2 ஜி.பீ.யூ உடன் இணைந்து 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் (MT6752) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. லெனோவா P70 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் ஃபிக்சட்ஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் 4G LTE தவிர, லெனோவா P70 ஸ்மார்ட்போனில் 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இதில் 142x71.8x8.9mm நடவடிக்கைகள், 149 கிராம் எடையுடையது மற்றும் மிட்நைட் ப்ளூ வண்ணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அம்பிஎண்ட் லைட் சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. 

லெனோவா P70 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 

  • டூயல் சிம்,
  • 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்பளே,
  • 2ஜிபி ரேம்,
  • 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் (MT6752) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
  • 5 மெகாபிக்சல் ஃபிக்சட்ஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 4G LTE,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
  • மைக்ரோ யுஎஸ்பி,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 4000mAh பேட்டரி,
  • 149 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget