அம்மா வேடத்தில் பியூட்டி குயின்

தமிழ் நடிகையான ஸ்ரீதேவி தமிழ் திரையின் சூப்பர் ஸ்டார்கள் மட்டுமல்லாது தெலுங்கு திரையின் சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக உச்ச நட்சத்திரமாக
ஜொலித்தவர். ஹிந்தி திரையிலும் கோலோச்சிய நடிகை ஸ்ரீ தேவி திருமணத்திற்கு பின்னர் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவரது நடிப்பில் வெளிவந்த இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற ஹிந்தி படம் தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட பட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ஹிந்தி படங்களில் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களிலும் நடிக்க நடிகை ஸ்ரீதேவி ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். தமிழ் திரை உலகில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் ராணியாக நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி தெலுங்கு திரையிலும் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார். பாகுபாலி படத்திற்கு பின்னர் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படத்தில் நடிகை ஸ்ரீதேவி அவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெலுங்கு திரைவட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget