பெங்களூர் சிட்டியில் மாடர்ன் கேர்ளாக வளைய வந்தவர்தான் அட்டகத்தி நந்திதா. ஆனால் அப்படிப்பட்ட அவரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்து
பாவாடை தாவணி கட்டி பக்கா தமிழச்சியாகவே நடிக்க வைத்தனர். அது அவருக்கு பெரிதாக ஒர்க்அவுட்டாகி விட இப்போது கிராமத்து கதை என்றாலே கூப்பிடு நந்திதாவை என்றநிலை ஆகிவிட்டது. அந்தவகையில், முண்டாசுப்பட்டி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களில் நடித்தவர் இப்போது இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்தும் உப்புகருவாடு உள்பட சில கிராமத்து கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்த படங்களில் அவருக்கு திருப்தியான வெயிட்டான வேடங்களே கிடைத்திருக்கிறது என்றபோதும், நடிப்பதெல்லாம் கிராமத்து கதைகளாக இருப்பதால் அவரை இன்னமும் மூன்றாம் தட்டு ஹீரோயினி ரேஞ்சில்தான் வைத்திருக்கிறார்களாம். அதனால் பல ஹிட் படங்களில் நடித்த பிறகும் இன்னும் தன்னை சம்பளத்திலும் சரி, வசதி வாய்ப்புகளிலும் சரி யாருமே பெரிதாக கண்டுகொள்ளாததால் கவலையில் இருக்கிறாராம் நந்திதா. அதனால் அடுத்தடுத்து தன்னை தொடர்பு கொள்பவர்களும் கிராமத்து கதைகளுடனேயே வருவதால் அவர்களிடம் வெறுப்பாகவே கதை கேட்கிறாராம் நந்திதா.

கருத்துரையிடுக