தேசிய வான்வெளி ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு

இந்தியாவிலுள்ள வான்வெளி ஆய்வகங்களில் தேசிய வான்வெளி ஆய்வகம் எனப்படும் நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரி இத்துறை சார்ந்த
இரண்டாவது பெரிய ஆய்வகமாகும். பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு சி.எஸ்.ஐ.ஆர்.,யின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த நிறுவனத்தில் புராஜக்ட் அஸிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள்: ஐந்து பிரிவுகளாக புராஜக்ட் அசிஸ்டென்ட் பதவி நிரப்பப்பட உள்ளது. முதல் மூன்று பிரிவுகள் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கானது. நான்காம் மற்றும் ஐந்தாம் பிரிவுகள் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களுக்கானது.

வயது: முதல் பிரிவு புராஜக்ட் அசிஸ்டென்டிற்கு அதிகபட்சம் 25 வயதும், இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவு புராஜக்ட் அசிஸ்டென்டிற்கு 32 வயதும், நான்காம் பிரிவுக்கு 35 வயதும், ஐந்தாம் பிரிவுக்கு 37ம் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: முதல் மூன்று பிரிவுகளுக்கு பி.இ., அல்லது பி.டெக்., பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்காம் மற்றும் ஐந்தாம் பிரிவுகளுக்கு பி.எச்.டி., எனப்படும் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.04.2015

இணையதள முகவரி: http://www.nal.res.in
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget