மேனி பளபளக்க டிப்ஸ் தரும் வெள்ளாவி நடிகை

தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் பிரபலமானவர் டாப்சி ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லாரன்சுடன்
‘காஞ்சனா–2’ பேய் படத்தில் நடிக்கிறார். மேலும், இந்தி படம் ஒன்றிலும் நடிக்கிறார். 

இந்நிலையில் டாப்சி அளித்த பேட்டி வருமாறு:– தமிழில் நடிக்கும் ‘காஞ்சனா–2’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்தி படமொன்றிலும் நடிக்கிறேன். நடிகைகளுக்கு சரும அழகு ரொம்ப முக்கியம். தோலை மினுமினுப்பாக வைத்துக்கொள்ள ரொம்ப மெனக்கெட வேண்டி உள்ளது. தோலுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்க வேண்டி இருக்கிறது என்று கூட சொல்லலாம். 

என்னை பொறுத்தவரை மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள அதிகம் தண்ணீர் குடிக்கிறேன். எண்ணெய் உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்கிறேன். சிகப்பு அழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பர தூதுவராக ஆகி இருக்கிறேன். நன்றாக யோசித்துதான் இதை ஏற்றுக்கொண்டேன். 

நான் விளம்பரப்படுத்தும் கிரீம் உடம்புக்கு பளபளப்பு கொடுக்கும். எனக்கு சிகப்பு அழகுக்காக கிரீம் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நடிகர், நடிகைகள், விளம்பர படங்களில் நடிப்பது அவசியமானது. இதன் மூலம் டெலிவிஷன்களில் அடிக்கடி தோன்ற முடியும். 

இவ்வாறு டாப்சி கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget