மாங்கா கதை விமர்சனம்

பிரேம்ஜி கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘மாங்கா’. இப்படத்தில் இவருக்கு அத்வைதா, லீமா என இரு நாயகிகள். ஆர்.எஸ்.ராஜா இயக்கி
வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. 

இப்படத்தில் பிரேம்ஜி பாகவதர் கெட்டப்பில் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து இயக்குனர் தற்போது வாய் திறந்துள்ளார். 

அதாவது கதைப்படி படத்தில் பிரேம்ஜி, சிவா என்ற பெயரில் வருகிறாராம். இவர் தன்னை பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள், சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன்மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான். 

இவனுடைய முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950-காலகட்டத்தை சேர்ந்த பாகவதரை (பிரேம்ஜி) சந்திக்கிறான். இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள்? சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறாராம். 

இப்படத்தில் பிரேம்ஜியுடன், இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரேம்ஜியே இப்படத்துக்கு இசையமைக்கிறார். ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே. சக்திவேல் தயாரித்துள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget