ஜோதிகா ரீ எண்ட்ரியாகி இருக்கும் படம் 36 வயதினிலே. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹவ் வோல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக். மலையாளப்படத்தை
இயக்கி ரோஷன் ஆண்ட்ரூவே இதையும் இயக்கி இருக்கிறார். படத்தின் கதை இதுதான்.
36 வயதாகும் ஜோதிகா தாலுகா ஆபீசில் கிளார்க்காக வேலை பார்க்கிறார். அவரது கணவர் ரகுமான் மத்திய அரசு ஊழியர். ரகுமானுக்கு வெளிநாட்டில் வேலைவாங்கி அங்கு குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்பது லட்சியம். இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறாள். ரகுமானின் முயற்சியால் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது. குடும்பத்தோடு வெளிநாடு செல்ல திட்டமிடும்போது ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட ரகுமான், மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார்.
தனித்து விடப்படும் ஜோதிகா மன உளைச்சலுக்கு ஆளாகிறார். படிக்கிற காலத்தில் கனவுகளோடும், லட்சியங்களோடும் இருந்த ஜோதிகா இப்போது சுமைதாங்கியாக வாழ்ந்த வாழ்க்கையும், அதையும் இழந்து நிற்பதும் வெறுமையை ஏற்படுத்துகிறது. இதனால் தன் வாழ்க்கையில் பிடிப்பை இழக்கும் ஜோதிகா தன் வீட்டு மாடியில் போட்டிருந்த காய்கறி தோட்டத்தை அழிக்க நினைக்கிறாள். அதனால் அதில் இருந்த காய்கறிகளை பறித்து வேலைக்காரியிடம் கொடுக்கிறாள். வேலைக்காரி அந்த காய்கறிகளை இன்னொரு பணக்காரர் வீட்டில் விற்கிறாள்.
இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்ட அந்த காய்கறிகளின் சுவை அவரை ஆச்சர்யப்படுத்துகிறது. அவர் ஜோதிகாகவை சந்தித்து பேசுகிறார். இதுபோல நிறைய உற்பத்தி செய்து தாருங்கள் நான் விற்பனை செய்து தருகிறேன் என்கிறார். அதற்கு அவளது பள்ளிக்கால தோழி ஒருவரும் உதவுகிறார். இதனால் ஜோதிகா காய்கறி விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி புகழ்பெறுகிறார். மாநில அரசு அவரை விவசாய ஆலோசகராக நியமிக்கிறது. ஜனாதிபதி விருது கொடுத்து கவுரவிக்கிறார். தன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் ஜோதிகா. இதை கேள்விப்பட்ட கணவர் ரகுமான் மகளுடன் இந்தியா திரும்புகிறார். மனைவியின் வளர்ச்சியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது மீதி கதை.

கருத்துரையிடுக