பலே நாயகியான எமி

ஐ படத்தில் விக்ரமுடன் நடித்தவர் எமி ஜாக்சன். அந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் அந்த படத்தில்
நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு எமியை இரண்டாவது நாயகியாக்க அப்பட டைரக்டர் வெங்கட்பிரபு திட்டமிட்டதை அறிந்த அவர் கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்தே வெளியேறினார். அதன்பிறகு உதயநிதி நடிக்கும் கெத்து படத்தில் கமிட்டானார். அதோடு தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் கமிட்டாகியிருந்ததால் ஆரம்பத்திலேயே உஷாராகி விட்டார் எமி.
அதனால் அந்த படத்தில் சைன் பண்ணுவதற்கு முன்பே கதையை துருவி துருவி கேட்டார். அப்போது தனது கேரக்டர் திருப்தியாக இருந்ததால் ஓகே சொன்னார். அதோடு அப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில், மேலும் சில டைரக்டர்களும் இரண்டு கதாநாயகி கதைகளில் நடிக்க எமியை தொடர்பு கொண்டபோது முதலில் மொத்த கதையையும் என்னிடம் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் நடிப்பதைப் பற்றி முடிவெடுப்பேன் என்று கூறி விட்டாராம். அதனால் அவரது கேரக்டரை டெவலப் பண்ணி சொல்லும் வேலைகளில் அப்பட டைரக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget