சரித்திரம் படைத்த காலக்ஸி எஸ் 6 போன்கள்

தான் அண்மையில் அறிமுகப்படுத்திய காலக்ஸி எஸ்6 மற்றும் எஸ் எட்ஜ் ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களின் விற்பனை விரைவில் ஏழு கோடியை
எட்டும் என சாம்சங் எதிர்பார்க்கிறது. இவற்றின் முதல் வார விற்பனையைக் கவனித்த சாம்சங் இந்த இலக்கினை அறிவித்துள்ளது. காலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனை விற்பனை செய்வதில், சாம்சங் பல பிரச்னைகளை எதிர் நோக்கியது. அதனால், அத்தகைய சிக்கல்களைத் தற்போது களைந்து, புதிய போன்களின் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது.

சென்ற ஏப்ரல் 10 அன்று, அமெரிக்காவிலும் மற்ற சில நாடுகளிலும், இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் விற்பனையைத் தொடங்கின. சாம்சங் 3 மற்றும் சாம்சங் 4 ஆகியவை தலா 7 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டதைத் தற்போதைய இலக்குடன் ஒப்பிடுகையில் குறைவு தான்.
கேலக்ஸி 5 விற்பனை மட்டும், எதிர்பார்த்ததைக் காட்டிலும் 40% குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. இதனால், சாம்சங் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் பதவி இழந்தனர்.

சாம்சங் நிறுவனம் வெகு சாமர்த்தியமாக தன் இரண்டு போன்களின் விற்பனைக்கு வழி அமைத்துள்ளது. மொபைல் சேவை நிறுவனம் ஒன்று, பத்து காலக்ஸி எஸ்6 போன்களை விற்பனை செய்திட வாங்கினால், ஆறு எட்ஜ் போன்களை வாங்கி விற்பனை செய்திட தகுதி பெறுகிறது.

டிஸ்பிளேயில், இரு பக்கங்களிலும் வளைவு கொண்ட முதல் ஸ்மார்ட் போன், காலக்ஸி 6 எட்ஜ் ஆகும். இதில் சில தகவல்கள் கிடைப்பது அரிய காட்சியாகவே உள்ளது. இதுவரை மேல்புறமாக ஸ்வைப் செய்தால் வரும் காட்சித் திரை, தற்போது நெட்டு வாக்கில், பக்கவாட்டில் இருந்து கிடைக்கிறது. வழக்கம் போல மேலாக இருந்தும் கிடைக்கிறது. இது மக்களை அதிகம் ஈர்க்கும் என சாம்சங் கருதுகிறது. இந்த இரண்டு போன்களுக்குமான முன் பதிவு 2 கோடி ஆக இருந்தது. போன்கள் விற்பனைக்குத் தரப்பட்ட முதல் நாளிலேயே, அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget