ஆண்களுடன் சூதாடிய கவர்ச்சி நடிகை

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி, காமெடி நடிகையாக இருப்பவர் கராத்தே கல்யாணி. இவர் ஆண்களுடன் சூதாட்டம் ஆடியதாக கைது
செய்யப்பட்டிருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஒரு வீட்டில் சூதாடிக் கொண்டிருந்தவர்கள் போலீசை கண்டதும் அலறி அடித்து ஓடினார்கள். ஓட முடியாத ஒரு பெண் மட்டும் மாட்டிக் கொண்டார். அவர் நடிகை கராத்தே கல்யாணி என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் உள்பட சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரொக்க பணம், விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். "சிலர் வேண்டுமேன்றே தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டதாக" கல்யாணி கண்ணீர் மல்க போலீசிடம் தெரிவித்துள்ளர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget