எதையும் வெளிப்படையாக பேசும் துணிச்சல் மிக்க நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர். அதே போல சர்ச்சைகளின் நாயகியும் அவர் தான்.
சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டார். ஆனாலும் கமர்ஷியல் ஹீரோயினாக உயர முடியவில்லை. அரண்மனை படத்துக்கு பிறகு இப்போது சவுகார்பேட்டை என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி...
* சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. திரும்பி பார்க்கும்போது எப்படி இருக்கு?
ரொம்ப ஆச்சர்யமாகத்தான் இருக்கு. மிஸ் பெல்காம் பட்டம் பெற்றது தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்பு முனை. அந்த பட்டம் தான் என்னை கற்க கசடற படத்தில் நடிக்க வைத்தது. அதற்கு பிறகு தாம்தூம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனைன்னு என்னோட கேரியர்ல ஸ்பெஷல் படங்கள் நிறைய இருக்கு. என்றாலும் அறிமுகமான கற்க கசடற தான் என்னால் மறக்க முடியாத படம். இந்த பத்து வருடத்தில் நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன். நிறைய விரோதிகளையும் சம்பாதித்திருக்கிறேன். எல்லாமே அனுபவம்தான்.
* 10 வருடம் நடித்தும் டாப்புக்கு வரமுடியலையே...?
டாப்புன்னு எதைச் சொல்றீங்க. நிறைய படங்கள்ல நடிக்கிறதையா, நிறைய சம்பளம் வாங்குறதையா... டாப்புன்னு ஒண்ணு கிடையவே கிடையாதுங்க. இன்னிக்கு உயரத்துல இருக்கிறவங்க நாளை இறங்கி வருவாங்க. இன்னிக்கு இறங்கி நிக்குறவங்க நாளை ஏறிப்போவாங்க. இதுல எங்க இருக்கு டாப்பு. பத்து வருஷம் சினிமால ஹீரோயினா நிலைச்சு நிக்குறதே பெரிய சாதனைதானே. இதுக்கு மேல என்ன வேணும்.
* பெயரைக்கூட மாத்தினீங்களே...?
அதுக்கு பெருசா காரணம் எதுவும் இல்லை. என்னோட அப்பா எது சொன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு கேட்டுக்குவேன். ஒரு நாள் பெயரை ராய் லட்சுமின்னு மாத்தி வச்சிக்கம்மான்னு சொன்னாரு, ஏன் எதுக்குன்னு கேக்கமால் மாத்திக்கிட்டேன். பெயர் மாத்தினுக்கு பிறகு என்னோட கேரியர்ல நிறைய மாற்றங்கள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.
* டோனி, ஸ்ரீசாந்த், வினய், வருண் மணியன்னு நிறைய சர்ச்சைகள் உங்களை சுற்றி சுற்றி வருகிறதே?
ஒரு பொண்ணு அழகா இருந்தாலே அவளுக்கு நிறைய பிரண்டுகள் கிடைப்பாங்க, அதுல நல்லவங்கள கண்டுபிடிச்சு பிரண்டாக்கிக்கணும், அதுலேயும் நான் நடிகை, நீங்க சொல்ற எல்லாரும் என்னோட பெஸ்ட் பிரண்டுங்க. நீங்க சொல்லாத நிறைய பேரும் இருக்காங்க. சிலர் சரியில்லைன்னு தெரிஞ்சதும் விலகிடுவேன். இப்படி நான் வெளிப்படையா பேசுறதாலதான் சர்ச்சைகள் என்னை சுற்றி வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை.
* த்ரிஷாவும் உங்க பிரண்டு லிஸ்டுலதானே இருந்தாங்க?
அப்போ இருந்தாங்க. இப்போ இல்லை. ஏன் இல்லை. ஏன் அவுங்களை விட்டு விலகினேன்னு அடுத்த கேள்வி கேட்காதீங்க. இப்பல்லாம் நான் ரொம்ப அமைதியாகிட்டேன். என் வேலை நடிப்பு உண்டு, நான் உண்டு. அதோடு நிறுத்திக்கிறேன்.
* தமிழை விட மலையாளத்தில் அதிகம் நடிக்கிரீங்களே ஏன்?
எங்க வாய்ப்பு கிடைக்குதோ அங்கதானே நடிக்க முடியும். தமிழ்ல என்னை கிளாமர் நடிகையாகவே பார்க்குறாங்க. மலையாளத்துல என்னை நல்ல நடிகையாக பார்க்குறாங்க. நல்ல மனைவி, குழந்தைகளுக்கு தாய்... என மெச்சூர்டான கேரக்டர்களை எனக்கு- தைரியமா கொடுத்தது மலையாள உலகம். மம்முட்டி, மோகன்லால் படங்கள்ல அடுத்தடுத்து நடிச்சிருக்கேன். தமிழ் நாட்டில் உள்ள கிளாமர் இமேஜை உடைக்கணும்னு போராடிக்கிட்டிருக்கேன். நிச்சயம் உடைப்பேன்.
* சவுகார்பேட்டையில் பேயாக நடிக்கிறீங்களா?
பேயா நடிக்கிறது இரண்டாவது விஷயம். அக்மார்க் சவுகார்பேட்டை பொண்ணா நடிக்கிறேன். அரண்மனைக்கு பிறகு நிறைய படங்கள் பேயாக நடிக்க கேட்டு வந்தார்கள். ஒரு படத்துல பேயா நடிச்சா தொடர்ந்து அப்படியே நடிக்கணுமான்னு வேண்டாமுன்னு சொல்லிட்டேன். இந்த படத்துல பேயாக நடிச்சாலும் அதற்கு முந்தைய போர்ஷன்ல நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்ங்றதால ஒத்துக்கிட்டேன்.
* ஒரு வழியா இந்திப் படத்துலேயும் நடிக்க போறீங்க போல...?
நான் இந்திப் படத்துல நடிச்சே ஆகணும்னு வாய்ப்பு தேடி அலைந்த மாதிரி இருக்கு உங்க கேள்வி. என்னோட உறவினர்கள், நண்பர்கள் நிறைய பேர் மும்பையில இருக்காங்க. அடிக்கடி மும்பை போவேன். நான் மும்பை போகுறப்பெல்லாம் இந்தி வாய்ப்பு தேடிப்போயிருக்கிறதா இங்க பரப்பிடுவாங்க. சில படங்கள்ல முன்பே நடிக்க கேட்டாங்க சில சூழ்நிலைகளால நடிக்க முடியல. இப்போது ஏ.ஆர்.முருதாஸ் சார் படங்கறதால ஒரு கேமியோ ரோல்ல நடிக்க ஒத்துக்கிட்டேன்.

கருத்துரையிடுக