ஜிம் செல்லும் காதல் நாயகி

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க சென்றவர்தான் சந்தியா. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்படத்தில்
நாயகியாக கமிட்டான நடிகையை விட சந்தியாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் இவரை கதாநாயகியாக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். ஆக, அப்படத்தில் பரத்துடன் நடித்த சந்தியாவுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் பெரிய பர்சனாலிட்டி இல்லையென்றாலும் தொடர்ந்து டிஷ்யூம், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா என பல அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

பின்னர் படங்கள் இல்லாததால் தனது தாய்மொழியான மலையாளத்துக்கு சென்று அக்கா, அண்ணி, ஆன்ட்டி என்று பாரபட்சம் பார்க்காமல் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்த சந்தியா, மறுபடியும் தமிழுக்கு வந்தபோது அவரது தோற்றம் பிரமாண்டமாக இருந்ததால் கதாநாயகி சான்ஸ் கொடுக்க யாருமே முன்வரவில்லை.

அதனால் யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அவரும் தொடர்ந்து சான்ஸ் கொடுக்காமல் டீலில் விட்டார். இருப்பினும் தற்போது சூதாட்டம், கத்துக்குட்டி, துணை முதல்வர் ஆகிய படங்களை கைப்பற்றி நடித்திருக்கும் சந்தியாவின் அபிமான டைரக்டர்கள் சிலர், அவரது உடல் பெருத்து போய் இருப்பதை சொல்லி உடலை குறைத்து விட்டு வந்தால் தொடந்து சான்ஸ் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம்.

அதனால், சிலகாலம் கேரக்டர் நடிகையானதால் உடலை பராமரிக்காமல் இருந்து வந்த காதல் சந்தியா, இப்போது உடல் எடையை குறைப்பதற்காக ஜிம் செல்லத் தொடங்கியிருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget