கவர்ச்சி பிரவேசம் செய்ய தயாராகும் காயத்ரி

விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் 18 வயசு, ரம்மி, மத்தாப்பூ ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. பெங்களூரில் பிறந்து
வளர்ந்த தமிழ் பெண்ணான இவர், எம்பிஏ படித்தவர். ஆனபோதும் சினிமா ஆசை அவரை கோடம்பாக்கத்துக்கு இழுத்து வந்துவிட்டது. அதோடு, மகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்த காயத்ரியின் தாய்குலமும் தனது வேலையை சென்னைக்கு மாற்றம் செய்து கொண்டு இங்கு வந்து குடியேறி விட்டார்.

ஆக, அம்மாவின் ஆதரவோடு சினிமாவில் இறங்கிய காயத்ரி, ஆரம்பத்தில் நான் ஆட்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண். அதனால் ஒரு வட்டம் போட்டுத்தான் நடிப்பேன் என்று கிளாமருக்கு தடை போட்டு நடித்து வந்தார். ஆனால், இப்போது விஜயசேதுபதியுடன் மெல்லிசை படத்தில் மட்டுமே நடித்து வரும் காயத்ரிக்கு அடுத்தபடியாக எந்த படமும் கமிட்டாகவில்லை.

அதனால், பொறுத்துப்பார்த்த காயத்ரி, குடும்ப நடிகை என்கிற வட்டத்தை விட்டு வெளியேறி கிளாமர் காட்டவும் ரெடியாகிவி்ட்டார். அப்படி தான் எதிர்பார்ப்பது போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தால் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி பிரவேசம் செய்யவும் தயாராக இருக்கிறாராம் காயத்ரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget