கோலிவுட் கோதாவில் ஆஸ்திரேலிய அழகி

சினிமாவில் அரை டஜனுக்கும் மேலான ஹீரோயின்களை அறிமுகம் செய்தவர் நடிகர் பிரஷாந்த், அவர் இப்போது புதிதாக ஆஸ்திரேலியாவில்
இருந்து ஒரு நடிகையை அறிமுகம் செய்துள்ளார், அவர் பெயர் அமண்டா. சிறிய இடைவௌிக்கு பிறகு பிரஷாந்த் ஹீரோவாக சாகசம் படைத்து வரும் படம் ''சாஹசம்''. அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் இப்படத்தில் புதுமுக ஹீரோயின் ஒருவரை அறிமுகம் செய்ய இருப்பதாக பிரஷாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். மேலும் இதுநாள் வரை அவர் யார் என்ற தகவலையும் வௌியிடாமல் பிரஷாந்த் ரகசியம் காத்து வந்தார்.

இந்நிலையில், தனது படத்தின் ஹீரோயினை பத்திரிகையாளர்கள் முன்பு பிரஷாந்த் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய பிரஷாந்த், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரான அமண்டா, பாலே நடனத்தில் கை தேர்ந்தவர். அதோடு நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். மேலும் எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் அதை அசால்லாட்டாக ஒரே டேக்கில் பேசும் திறமை மிக்கவர். அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி தரும். சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு அமண்டா வெகுவாக பேசப்படும் நடிகையாகி விடுவார் என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget