குத்தாட்ட நடிகையான சுஜிபாலா

நடிகை சுஜிபாலா, கிச்சா வயது 16 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற் பிறகு அய்யாவழி உள்ளிட்ட சில படங்களில்
ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு போதிய வாய்ப்பு இல்லாமல் தான் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் என்பவரை திருமணம் செய்தார். பின்பு திருமணத்தை மறுத்தார். இந்த நிலையில் அந்த பிரச்னைகளிலிருந்து வெளிவந்து ஒரு பாட்டுக்கு ஆடும் குத்தாட்ட நடிகையாகிவிட்டார்.

விந்தை படத்தில் கடைசியாக ஆடிய அவர் தற்போது பானு என்கிற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். சிறு பட்ஜெட் படங்களின் குத்தாட்ட நடிகைகளாக தற்போது ரிஷா, மைனா நாகு இருந்து வருகிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது சுஜிபாலாவும் இணைந்து விட்டார்.

தற்போது அவர் ஆடியுள்ள பானு படத்தை ஜி.வி.சீனு இயக்கி நடித்துள்ளார், அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்துள்ளார், உதயராஜ இசை அமைத்துள்ளார். நந்தினி ஹீரோயினாக நடித்துள்ளார். கடவுளை நம்பாத நாத்திக ஹீரோவுக்கும், முஸ்லிம் பெண்ணுக்குமான காதலை சொல்கிற படம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget