டி.என்.பி.எஸ்.சி.,யில் காலி பணியிடங்கள்

தமிழக அரசுப் பணியிடங்களை தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு பொதுவான தேர்ச்சி முறை மூலம்
நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக மாற்று மருத்துவப் பணி சார்ந்த காலியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரங்கள்: உதவி மருத்துவ அதிகாரி சார்ந்த டி.என்.பி.எஸ்.சி.,யின் காலியிடங்கள் பின்வருமாறு நிரப்பப்பட உள்ளன சித்தா பிரிவில் 63ம், ஆயுர்வேத பிரிவில் 8ம், யுனானி பிரிவில் 3ம், ஹோமியோபதி பிரிவில் 9ம் நிரப்பப்பட உள்ளன.

வயது: 01.07.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எச்.பி.ஐ.எம்., ஜி.சி.ஐ.எம்., எம்.டி., பி.ஐ.எம்., எல்.ஐ.எம்., பி.எஸ்.எம்.எஸ்., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை தாங்கள் விண்ணப்பிக்கும் துறையில் முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.175/-ஐ இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.04.2015

இணையதள முகவரி: http://www.tnpsc.gov.in/notifications/6_2015_not_eng_amo_2015.pdf
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget