0
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிதியில் நடத்தப்படும் பல்லவன் கிராம வங்கி 2006ல் நிறுவப்பட்டது. அதியமான் கிராம வங்கி,
தர்மபுரி மற்றும் வல்லளார் கிராம வங்கி - கடலூர் ஆகியவற்றை இணைத்து இந்த வங்கி நிறுவப்பட்டது. தேசிய கிராம வங்கிகளில் ஒன்றான பல்லவன் கிராம வங்கியில் அதிகாரிகள் மற்றும் மல்டிபர்பஸ் அஸிஸ்டென்ட் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரங்கள்: பல்லவன் கிராம வங்கியில் அதிகாரிகள் பதவியில் 65 காலியிடங்களும், மல்டிபர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட் பிரிவில் 51 இடங்களும் காலியாக உள்ளன.

தேவைகள் என்னென்ன?: கடந்த 2014 அக்டோபர் மாதம் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி உரிய தகுதிகளைப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் இதே தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படை மதிப்பெண்கள் விண்ணப்பதாரர் சார்ந்திருக்கும் பிரிவைப் பொறுத்தும் மாறுபடுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் குறைந்த பட்சம் 70ம், இதர பிரிவினர் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் குறைந்தபட்சம் 80ம் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
தேர்ச்சி முறை: கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆர்.ஆர்.பி., க்கான ஐ.பி.பி.எஸ்., பொது எழுத்துத் தேர்வு மற்றும் இதே அமைப்பு நடத்திய நேர்காணல் ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நேர்காணல் தேர்வுகளை சேலத்தில் நடத்தி அதன் மூலம் தேர்ச்சி செய்யப்படும் என்று தெரிகிறது. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.04.2015

இணையதள முகவரி: www.pallavangramabank.in/en/index.html
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top