சவுக்குதோப்பில் வெளிநாட்டு ஜிகிடிகள்

மாற்றிக்காட்டுவோம் என்ற படத்தை இயக்கிய அ.ஹாளிது, தற்போது இயக்கி உள்ள படம் சவுக்குதோப்பு. இதில் கன்னட நடிகர் பார்கவ், நடிகை
பரிமளம் ஆகியோர் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

"தமிழ்நாட்டில் உள்ள அடர்ந்த சவுக்கு தோப்புகள்தான் தீவிரவாதிகளின் குறி. அவைகளை குண்டு வைத்து அழித்துவிட்டால் நாட்டின் தட்பவெப்ப நிலையை மாற்றி மழை வராமல் செய்ய முடியும் என்று திட்டமிடுகிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் தங்களது பேஸ்புக் நண்பர்களான ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவிகள் 5 பேருடன் சேர்ந்து அந்த வெடிகுண்டுகளை எப்படி செயலிழக்கச் செய்து நாட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. சேலம், தர்மபுரி, பழவேற்காடு, சென்னை, கன்னியாகுமரி, மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் 5 ஜெர்மன் பெண்கள் நடித்துள்ளது சிறப்பு அம்சமாகும்" என்றார் இயக்குனர் ஹாளீது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget