சமீபகாலமாக ரசிகர்கள் வித்தியாசமான படங்களுக்கே வரவேற்பு கொடுத்து வருவதால், ஹீரோக்கள் படத்துக்குப்படம் ஏதேனும் வித்தியாசமான
கெட்டப்புகளில் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் அனேகன் படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தோன்றினார் தனுஷ். இதேபோல் மற்ற ஹீரோக்களும் வித்தியாசமான தேடல்களில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இதற்கு முன்பு இரண்டுவிதமான வேடங்களில் நடித்தும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல்தான் நடித்திருந்தார் விஜய். ஆனபோதும், ஏதாவது வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருந்தபோதுதான் புலி படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னார் சிம்புதேவன்.
சரித்திரை பின்னணி கொண்ட இந்த படத்தில் விஜய் இளவரசன் கெட்டப்பில் நடித்து வந்த காட்சிகள் இதுவரை படமாக்கப்பட்டு வந்தது. சென்னையில் ஈசிஆர் சாலையில் அரண்மனை செட்டில் 2 மாதங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பின்னர் கேரளாவுக்கு சென்று விட்டு அதையடுத்து தலக்கோணத்தில் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அரசர் காலத்து கெஸ்ட் ஹவுஸ் செட்டில் ஒரு மாதமாக படமாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது விஜய் அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கெட்டப்பில் குள்ள மனிதனாக கமல் நடித்தது போன்ற ஒரு கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 3 அடி உயரமுள்ள மனிதனாக அவர் நடிக்கும் அந்த காட்சிகள் அதிநவீன கேமராக்களை வைத்து படமாக்கப்படுகிறது. அந்த கெட்டப்பில் நடிக்கும் விஜய்க்கு பாடல்கூட உள்ளதாம்.
ஆனால், இந்த காட்சிகளை மிக ரகசியமாக படமாக்கி வருகிறார்கள். அதோடு, இந்த கெட்டப் ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் புலி யூனிட்டில் உள்ளவர்களுக்கு அதிரடி கண்டிசன் போடப்பட்டிருக்கிறது.

கருத்துரையிடுக