கோடை வெயிலை தணிக்கும் நடிகை

கோடை வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கியிருப்பதால், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளை கேரவனை விட்டு வெளியே அழைத்து வரவே
படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக கேரவனை விட்டு வெளியே முகத்தை காட்டும் நடிகைகள் நெருப்பு ஜூவாலை போன்று வெயிலின் தாக்கம் இருப்பதால் கேமரா முன்பு நடிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் தங்களது உடம்பில் ஜில் தண்ணீரில் நனைத்த ஈரமான துணிகளால் உடம்பை நனைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஆனால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வில் இருக்கும் நடிகைகளோ, இந்த வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியாக, வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சில நடிகைகள் மே மாதம் முழுக்க எந்த படத்திற்கும் கால்சீட் கொடுக்காமல் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை அடுத்து பாயும்புலி, ராவா படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தாவோ, ஏதேனும் குளிர்பிரதேச நாடுகளுக்கு சென்று தனது மேனியை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பவர், மே மாதம் பாயும்புலி படப்பிடிப்பில் ஒரு பத்து நாட்கள் கலந்து கொண்டதும், மொரீஷியஸ் நாடுக்கு செல்கிறாராம். ஒரு 15 நாட்கள் அங்கே தங்கிவிட்டு அதன்பிறகே அவர் மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு வருகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget