மார்கரிட்டா வித் ஏ ஸ்டிரா சினிமா விமர்சனம்

பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட 20 வயது பெண் கேரக்டரில், லைலா (கல்கி கோச்லின்) நடித்திருக்கிறார். சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவரான
லைலா, இளைய சகோதரர், நண்பர் போல பழகும் அப்பா மற்றும் அம்மா (ரேவதி) உள்ளிட்டோர் நிஜ பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். மாற்றுத்திறனாளி இளைஞனுடன் காதல்வயப்பட்டிருந்த லைலா, அதேநேரத்தில், இசைக்குழுவில்உள்ள இளைஞரால் ஈர்க்கப்படுகிறாள். இசைக்குழு இளைஞன் மீது லைலா காதல்வயப்படுகிறாள்.... இதன்காரணமாக, பெரும் மனஅழுத்தத்திற்கு லைலா ஆளாகுகிறாள். இந்நிலையில், அம்மா ரேவதி, லைலாவை, நியூயார்க் பல்கலைக்கழகத்தில், மேற்படிப்புக்காக லைலாவை சேர்த்து விடுகிறார். அங்கு லைலா, வங்கதேச நாட்டை சேர்ந்த பார்வையற்ற பெண்ணான கானுமை (ஷயானி குப்தா) சந்திக்கிறாள். இவர்கள் இருவரும் காதலில் விழுகின்றனர். இவர்களது லெஸ்பியன் உறவு, இவர்கள் இருவரையும் வலுவாக இணைத்திருந்த நிலையில், லைலா, தனது படுக்கையை, ஒரு ஆண் நண்பருடன் பகிர்ந்து கொள்கிறாள். இதன்பின்னர், லைலாவின் எஞ்சிய வாழ்க்கை, எத்தகைய விளைவுகளை சந்திக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வலி, உணர்வு மற்றும் அவளின் அபிலாஷைகளை திரையில் கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் சோனாலி போஸ் வெற்றி பெற்றிருக்கிறார். சிறந்த திரைக்கதையின் மூலம் ஒரு உன்னதமான படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படம் இன்ஸ்ட்ரஸ்டிங் ஆக உள்ளபோதிலும், நீ.....ளமான திரைக்கதையால், அவ்வப்போது சிறிது சுணக்கம் ஏற்படுகிறது. படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவராலும் யூகிக்கும் வகையிலேயே உள்ளது. படத்தின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. கலைத்துறை மற்றும் எடிட்டிங் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

கல்கி கோச்லினின் நடிப்பு, அனைத்து கதாபாத்திரங்களையும் மிஞ்சும் வகையில் உள்ளது. இந்த படத்திற்காக, கல்கிக்கு நிச்சயம் விருதுகள் காத்திருக்கின்றன. ரேவதி சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும், நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். ஷயானி குப்தா உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் நடிப்பும் சிறப்பாகவே உள்ளது.

சிறந்த நடிப்பை விரும்புபவர்களுக்கு, மார்க்கரிட்டா வித் ஏ ஸ்டிரா படம், ஒரு சிறந்த ட்ரீட் தான்...
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget