மிஸ்டர் எக்ஸ் சினிமா விமர்சனம்

பாலிவுட்டின் த்ரில்லர் புகழ் இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் வௌியாகி இருக்கும் த்ரில்லர் படம் தான் மிஸ்டர் எக்ஸ்.
இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா..? இல்லையா...? என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, போலீஸ் அதிகாரி ரகுராம் ரத்தோர்(இம்ரான் ஹாஸ்மி). இவரது காதலி கம் கடமை தவறாத போலீஸ் அதிகாரி சியா(அமைரா தஸ்தூர்). இவர்களது காதல் வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கையில், மூத்த அதிகாரி ஒருவரை பகைக்க, அப்போது முதல் பல விதமான இன்னல்களை சந்திக்கிறார் இம்ரான். குறிப்பாக தனது உடல் பற்றி எரிவது போன்றும், ஒருகட்டத்தில் கண்ணுக்கு தெரியாதபடி மறைந்து போகிறார். இம்ரான் தனக்கு கிடைத்த சக்தியை தவறாக பயன்படுத்துகிறார். பின்னர் இப்பிரச்னையிலிருந்து இம்ரான் எப்படி மீள்கிறார் என்பது தான் மிஸ்டர் எக்ஸ் படத்தின் சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த கதை.

இம்ரான் ஹாஸ்மி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் அவரது நடிப்பில் அப்படியே பிரதிபலிக்கிறது.

இஷ்க் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அமைரா தஸ்தூர், தன் முந்தைய படத்தை காட்டிலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். கூடவே கவர்ச்சியிலும் தான்...!

படத்தில் இடம்பெறும் பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர். அதேபோல் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் மிளிர்கின்றன. ஆனால், ஏற்கனவே நாம் கேட்டு, பார்த்து, பழகிய கதையும், வலுவான திரைக்கதையும் இல்லாததால் விக்ரம் பட்டின் இயக்கம் சொல்லும்படியாக இல்லை. இப்படியொரு படத்தை எடுப்பதற்கு பதிலாக பேசாமல், தயாரிப்பாளர் ஹாலோ மேன், மிஸ்டர் இந்தியா போன்ற படங்களை ரீ-மேக் செய்திருக்கலாம்.

மொத்தத்தில், மிஸ்டர் எக்ஸ் படத்தை பார்க்காமல் இருந்தால் உங்களது பணமும், நேரமும் மிச்சமாகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget