பிணமாக நடிக்கும் நடிகை

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது தமிழ், கன்னடத்தில் இயக்கும் படம் ஒரு மெல்லிய கோடு. கன்னடத்தில் கேம்
என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாத கொடூர கொலைகளை கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணரின் கதை. அந்த நிபுணராக அர்ஜூன் நடிக்கிறார். ஷாம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தியாவின் ஒரு வி.வி.ஐ.பி கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. கொலைக்கான காரணமும் தெரியவில்லை. அதை அர்ஜுன் கண்டுபிடிப்பது கதை.

கொலையான அந்த வி.வி.ஐ.பி ஒரு கோடீஸ்வர தொழிலதிபர். அந்த கேரக்டரில் மனீஷா கொய்ராலா நடிக்கிறார். படத்தில் அவர் கோடீஸ்வரியாக ஒரு சில காட்சிகளில்தான் வருவார். அதன் பிறகு அவர் பிணமாகத்தான் நடிக்கிறார். அந்த பிணத்தை பல கோணங்களில் ஆராய்ந்து அர்ஜுன் கொலையாளிகளை கண்டுபிடிப்பார்.

பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடயவியல் பரிசோதனை லேப் செட்டில் ஒருவாரமாக மனீஷா பிணமாக நடித்துள்ளார். அவர் தொழிலதிபராக உலாவரும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget