சென்னை உயர் நீதிமன்றம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 26.06.1862ல் விக்டோரியா அரசியின் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்டது.
தற்சமயம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மதுரையிலும் அமர்வு உள்ளது. இந்த இரண்டு நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள லா கிளார்க் எனப்படும் சட்ட எழுத்தர் பதவிகளை ஒரு வருட கால சிறப்புப் பணி நியமன அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற அடிப்படையில் சட்டப் பிரிவில் பட்டப் படிப்பை அரசுஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்தவராக இருக்க வேண்டும். இதன் பின்னர் பார் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்திருப்பதும் கட்டாயத் தேவையாகும். முதல் முயற்சியிலேயே இந்தத் தேர்வுகளை வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த இரண்டு வருட காலத்திற்குள் மேற்கண்ட தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தற்சமயம் முது நிலை சட்டப் படிப்பை மேற்கொண்டு கட்டாய அட்டண்டென்ஸ் தேவைப்படுபவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
முழுமையான மற்றும் சரியான தகவல்களைப் பெற கட்டாயம் இணையதளத்தைப் பார்க்க வேண்டும். பணிக்காலத்தில் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அக்னாலெட்ஜ்மெண்ட்டுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
The Registrar General,
High Court,
Madras-600 104.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 24.04.2015
இணையதள முகவரி: <http://www.hcmadras.tn.nic.in/lawclerknotf2015.pdf>

கருத்துரையிடுக