ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை சர்வ தேச தரத்துடன் நிர்வகிக்கும் நோக்கத்தில் இன்டர் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப்
இண்டியா மற்றும் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆகிய இரண்டையும் இணைத்து 1955ல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் அமைப்பு நிறுவப்பட்டது. சர்வ தேச பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்சிகியூடிவ் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகளும் காலியிடங்களும்: ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் ஜூனியர் எக்ஸிகியூடிவ் பதவியானது கார்ப்பரேட் அபெயர்ஸ் பிரிவில் 2ம், நிதிப் பிரிவில் 30ம், டெக்னிகல் பிரிவில் 30ம், கார்கோ பிரிவில் 25ம், எச்.ஆர்., பிரிவில் 30ம், கமர்ஷியல் பிரிவில் 20ம், சட்டப் பிரிவில் 15ம், அபீசியல் லாங்குவேஜ் பிரிவில் 2ம் நிரப்பப்பட உள்ளது.

வயது: 30.06.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி அத்துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப் படிப்பு அல்லது சிறப்பு படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உடையவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ சலான் வாயிலாக எஸ்.பி.ஐ., கிளையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.06.2015

இணையதள முகவரி: <http://www.aai.aero/>
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget