ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பிறகு சோனியாஅகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன். இந்த படத்தில்
விவேக் நாயகனாக நடித்திருக்கிறார். சந்திரமோகன் இயக்கியுள்ளார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் கதைப்படி மாமியாக நடித்திருக்கிறார் சோனியாஅகர்வால். அதோடு படம் முழுக்க பிராமணர்கள் பேசுவது போன்றும் தமிழ் பேசி நடித்திருக்கிறார். ஆனபோதும், ஒரு காட்சியில்கூட அவர் மடிசார் அணிந்து நடிக்கவில்லையாம். படம் முழுக்க சுடிதார் மற்றும் புடவை அணிந்துதான் நடித்துள்ளாராம்.
அதனால், மாமி வேடத்தில் நடித்தவரை ஒரு காட்சியில்கூட மடிசார் கட்டி நடிக்காமல் விட்டால் அது ஒரு குறையாகி விடும் என்று கடைசி நேரத்தில் ஒரு பாடல் காட்சியில் அவரை மடிசார் அணிந்து நடிக்க வைத்துள்ளாராம் டைரக்டர் சந்திரமோகன்.
மேலும், இப்படத்தில் மற்ற காட்சிகளில் எல்லாம் வழக்கமான காஸ்டியூம் அணிந்தே நடித்துள்ள சோனியா அவர்வாலுக்கு, இந்த மடிசார் அணிந்து நடித்த பாடல் காட்சி ரொம்ப பிடித்தமானதாகி விட்டதாம்,. அதனால் அந்த பாடலில் இடம்பெற்ற சில போட்டோக்களை தனது ஆல்பத்தில் வைப்பதற்காக வாங்கிச்சென்றாராம் நடிகை.

கருத்துரையிடுக