குடிபோதையில் கலாட்டா செய்த நடிகை

கேரள சட்டசபை பெண் ஊழியர் சங்கத்தின் ஆண்டு விழாவை நடிகை ஊர்வசி சிறப்புரையாற்றி துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் துவக்கி
வைக்க வேண்டிய ஊர்வசி விழாவிற்கு வரவில்லை. இதனால் இன்னொரு சிறப்பு அழைப்பாளரான கேரள சட்டசபை சபாநாயகர் சக்தன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக நடிகை ஊர்வசி வந்தார். 

வரும்போதே நல்ல குடிபோதையில் தள்ளாடியபடி வந்தார். பின்னர் ஏற்கெனவே விழா துவக்கி வைக்கப்பட்டுவிட்டது தெரியாமல் அவரே மேடையேறி மைக் பிடித்து சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசினார்.
விஷயம் விபரீதம் ஆவதை உணர்ந்த சபாநாயகர் விழா அரங்கை விட்டு வெளியேறினார். இதை கவனித்த ஊர்வசி அவரை கடுமையாக தாக்கி பேச ஆரம்பித்தார். விழா ஏற்பாட்டாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக மேடையிலிருந்து கீழே இறக்கி காருக்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் காருக்குள் ஏறாமல் விழா ஏற்பாட்டாளர்களிடம் நான் இருக்கும் போது அந்த ஆளு (சபாநாயகர்) எப்படி வெளியே போகலாம் என்று தகராறு செய்தார். ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஊர்வசி மேடையில் உளறுவதும், அவர் காரில் ஏற மறுத்து போதையில் தகராறு செய்யும் வீடியோ காட்சிகள் இப்போது வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக கேரள மீடியாக்கள் ஊர்வசியை தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. வீட்டில் சென்று விசாரித்தால் அவர் இங்கு இல்லை என்ற தகவல் கிடைக்கிறதாம்.

ஊர்வசி, மனோஜ் கே ஜெயன் விவாவரத்து வழக்கு நடந்தபோது இதே போன்று கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்ததும், நீதிபதி அவரை கண்டித்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget